Load Image
Advertisement

அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை

Tamil News
ADVERTISEMENT
திருப்போரூர்:திருப்போரூர் கிழக்கு மாடவீதி தனியார் திருமண மண்டபத்தில், அ.தி.மு.க., சார்பில், 'பூத் கமிட்டி' நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று நடந்தது.

இதில், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலர் குமரவேல் தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலர் நந்தகுமார், நகர செயலர் முத்து முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலர் ஆறுமுகம், மதுராந்தகம் எம்.எல்.ஏ., மரகதம் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில், திருப்போரூர் வடக்கு ஒன்றியம், தெற்கு ஒன்றியம், நகரம் சார்ந்த 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

வருகிற 2024 எம்.பி., தேர்தலில், பூத் கமிட்டி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகளின் பணிகள், கட்சியின் வளர்ச்சி, ஒற்றுமை ஆகியவை குறித்து, ஆலோசனை செய்யப்பட்டது.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement