ADVERTISEMENT
மாமல்லபுரம்:மாமல்லபுரம், சுற்றுலா பகுதிகளில், நடைபாதை கடைகள் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட சிற்ப பகுதிகள், சாலை பகுதிகளில், இக்கடைகள் அமைந்து, சுற்றுலாவிற்கும், வாகன போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ளது.
மத்திய அமைச்சர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள் சுற்றுலாவின்போது மட்டும், தற்காலிகமாக அகற்றுவர். தற்போது, 'ஜி - 20' நாடுகள் பிரதிநிதிகள், பிப்.,1ல், இங்கு சுற்றுலா வருகின்றனர்.
இதையடுத்து, ஜன., 31ல் இருந்து, பிப்., 2 வரை, இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து, தாசில்தார் பிரபாகரன், பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் ஆகியோர், வியாபாரிகள் தாங்களே கடைகளை அகற்றுமாறு, நேற்று எச்சரித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!