மது போதையில் அடிதடி உடன்பிறப்புகளுக்கு கம்பி
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த கரும்பூர் பகுதியை சேர்ந்தவர், மாய கிருஷ்ணன் மகன்கள் மதன்குமார். 40, மகேஷ், 34, சென்டரிங் வேலை செய்து வருகின்றனர்.
இதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள், அண்ணாமலை மகன்கள் வினோத், 22, மற்றும் சந்துரு,19, ஆகியோர் இணைந்து, கடந்த 23ம் தேதி, கண்டிகை பகுதியில் வேலைக்கு சென்று திரும்பி உள்ளனர்.
அன்று மாலை, அனைவரும் சேர்ந்து மது அருந்தும் போது, அவர்களிடையே வாய்த் தகராறு ஏற்பட்டு, சண்டையிட்டுள்ளனர். அருகில் இருந்தவர்கள், அவர்களை விலக்கி அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், அதிகாலை 2 மணியளவில், வினோத், சந்துரு ஆகிய இருவரும் இணைந்து, கட்டையால் மகேஷ் மற்றும் மதன்குமாரையும் சரமாரியாக தாக்கியதில், இருவருக்கும் தலை, கைகள் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்த மறைமலை நகர் போலீசார், நேற்று முன்தினம், வினோத், சந்துரு ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!