Load Image
Advertisement

படூர் பெரிய குளத்தில் துாய்மை பணி துவக்கம்

Cleaning work started in Badur Big Pond    படூர் பெரிய குளத்தில் துாய்மை பணி துவக்கம்
ADVERTISEMENT
திருப்போரூர்:ளம்பாக்கத்தை அடுத்த படூர் ஊராட்சியில், 12 ஏக்கர் பரப்பளவில், 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெரிய குளம் உள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன், இக்குளத்து நீரை, மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.

இக்குளம், முறையான பராமரிப்பு இல்லாததால், 20 ஆண்டுகளாக, கழிவு நீர் வெளியேற்றும் மற்றும் குப்பை கொட்டும் இடமாக மாறிவிட்டது. இதனால், அப்பகுதி முழுதும், கடும் துர்நாற்றம் வீசியது.

கடந்த ஜன., 2021ம் ஆண்டு, தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து, இந்த குளத்தில் முதற்கட்டமாக துாய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. குளத்தில் தேங்கியிருந்த 'பிளாஸ்டிக்' குப்பை மற்றும் கழிவுப் பொருட்கள், கரைகளில் இருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டன.

எனினும், இரண்டு ஆண்டுகள் ஆனதால், மீண்டும் குளத்தில் குப்பைக் கழிவுகள் குவிந்து மாசடைந்தன.

எனவே, குளத்தை மேம்படுத்தி நிரந்தரமாக பாதுகாக்க, படூர் ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, தற்போது, இரண்டாம் கட்ட துாய்மை பணிகள் நேற்று முன்தினம் துவங்கப்பட்டன.

இதில், தனியார் கல்லுாரி மருத்துவ மாணவ - மாணவியர் பங்கேற்று, குப்பைக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement