ADVERTISEMENT
புதுடில்லி:“நம் நாட்டில் ஆக்கிரமிப்பு செய்து வரும் நிலையிலும், சீனாவுடன் இந்தியாவின் வர்த்தகம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது,” என, புதுமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
புதுடில்லி அரசு சார்பில், குடியரசு தின விழா சத்ரசல் மைதானத்தில் கோலாகலமாக நேற்று நடந்தது.
இதில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:
நம்முடன் வர்த்தகம் செய்து சம்பாதிக்கும் பணத்தில், நம் நாட்டுக்கு எதிராக பயன்படுத்த ஏராளமான ஆயுதங்களை சீனா வாங்கிக் குவிக்கிறது. நம் நாட்டின் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இது, ஒவ்வொரு இந்தியனுக்கும் கவலை அளிக்கும் செய்தி. எல்லையில் நமது வீரர்கள் சீனாவை தைரியமாக எதிர்கொள்கின்றனர். இந்தச் சண்டையில் அவர்களுக்கு ஆதரவளிப்பது நம் கடமை. வர்த்தகத் துறையில் சீனாவை புறக்கணிக்க வேண்டும். ஆனால், சீனாவுடன் நம் நாட்டின் வர்த்தகம் 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, வெட்கக்கேடான செயல். நம் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து நமது நிலத்தை ஆக்கிரமித்துள்ள சீனாவுக்கு எதிராக மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? ஒருபக்கம் சீனா ஆக்கிரமிக்கிறது, மறுபக்கம் நாம் அந்த நாட்டுடன் வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறோம்.
கடந்த 2020ம் ஆண்டில் சீனாவிலிருந்து 65 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி செய்துள்ளோம். இதுவே, 2021ல் 95 பில்லியன் டாலராக உயர்ந்து, கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளது. நாம் சீனாவை பணக்கார நாடாக ஆக்கி வருகிறோம். அந்தப் பணத்தில் அது ஏராளமான ஆயுதங்களை வாங்குகிக் குவிக்கிறது. நம் பணத்தைப் பயன்படுத்தி நம்மையே தாக்க ராணுவத்திலும் அதிக வீரர்களை நியமிக்கிறது. சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும். சீனாவில் இருந்து செருப்பு, சிலை மற்றும் மெத்தை போன்ற பொருட்களை வாங்குகிறோம். இதையெல்லாம் நம் நாட்டில் தயாரிக்க முடியாதா?.
மத்திய, மாநில அரசுகள் இதுபோன்ற தொழில்களுக்கு தேவையான உதவிகளை செய்தால் நம் நாட்டிலேயே இந்தப் பொருட்களை தயாரிக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் 12 லட்சம் வர்த்தகர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், போலீஸ் அணிவகுப்பு மரியாதை, பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடந்தன.
துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!