இரவு வரை தங்கிய ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் கும்மாளம்
புதுடில்லி:மேயர் தேர்தல் நடத்தப்படாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டும் மாநகராட்சியை விட்டு வெளியேறாத ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் பாட்டு, டான்ஸ், நொறுக்குத் தீனி என இரவு வரை பொழுதைக் கழித்தனர்.
புதுடில்லி மாநகராட்சியில் நேற்று முன் தினம் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., கவுன்சிலர்களின் கடும் அமளியால் கூட்டம் முதலில் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் கூடியபோதும் அமளி ஓயவில்லை. இதனால், நாள் முழுதும் சபையை ஒத்தி வைத்து தற்காலிக தலைவர் சத்ய சர்மா உத்தரவிட்டார்.
இதையடுத்து, பா.ஜ., கவுன்சிலர்கள் மாநகராட்சியை விட்டு வெளியேற்றினர். ஆனால், ஆம் ஆத்மி கட்சியின் 134 கவுன்சிலர்கள், 13 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் மூன்று எம்.பி.,க்கள் வெளியே செல்லவில்லை. மாநகராட்சி மன்றக் கூட்டத்திலேயே இரவு 7:00 மணி வரை அமர்ந்து இருந்தனர்.
டீ, பிஸ்கட் மற்றும் நொறுக்குத் தீனிகளை சாப்பிட்டபடி, சில கவுன்சிலர்கள் பிரபல ஹிந்தி பாடல்களை பாடினர். சிலர் அதற்கு நடனம் ஆடினர்.
முதன்முறையாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், மூத்த கவுன்சிலர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்.
மாலையில் வெளியேறி விடுவர் என காத்திருந்த மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மிகவும் நொந்து போயினர். இரவு 7:30 மணிக்கு அனைவரும் புறப்பட்டுச் சென்றனர்.

மக்களுக்கு அவமதிப்பு
புதுடில்லி காங்கிரஸ் தலைவர் அனில் சவுத்ரி கூறியதாவது:ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., ஆகிய கட்சிகள் மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலை நடத்தவிடாமல் திட்டமிட்டே அமளி செய்கின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புதான் மாநகராட்சியை நிர்வாகம் செய்ய வேண்டும். ஆனால், தேர்தல் முடிந்து ஒரு மாதம் கடந்தும் அதிகாரிகள்தான் இன்னும் நிர்வகித்து வருகின்றனர். இது, ஓட்டுப் போட்ட மக்களை அவமதிக்கும் செயல். அதிகாரமிக்க மேயர் பதவிக்காக இரு கட்சிகளும் மக்களுக்கு துரோகம் செய்கின்றன. பதவி ஆசையை துறந்து மக்களுக்கான வளர்ச்சிப் பணியில் அக்கறை செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!