Load Image
Advertisement

டில்லியில் மேகமூட்டம் ஹிமாச்சலில் கன மழை

புதுடில்லி:தலைநகர் டில்லியில் நேற்று வானம் மேகமூட்டமாக இருந்தது. குறைந்தபட்ச வெப்பநிலை 10.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

குடியரசு தின விழாவான இன்றும் மேகமூட்டமான சூழல் நிலவும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சப்தர்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 12.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

அடுத்த ஐந்து நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஜன.,29ல் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த ஆண்டு கடுங்குளிர் காலமான ஜனவரியில் 82.2 மி.மீ., மழை பெய்தது.

மலைப் பிரதேசத்தில் மழை



ஹிமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி சம்பா, கின்னவுர், சிம்லா மற்றும் குலு மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.

இதனால், 265 சாலைகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. நாளை இரவு முதல் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதேநேரத்தில் மாநிலத்தில் சில இடங்களில் நேற்று கனமழை பெய்தது. கோண்ட்லா 50.5, சலூனி 46, குகும்சேரி 32, பார்மவுர் 30, கீலாங் 23, ஹன்சா 20, கோதி 10, கத்ராலா மற்றும் சாங்க்லா 8, கல்பா மற்றும் ஷில்லாரூ 5, சோபால், நர்கண்டா 5, பூஹ் 3, குப்ரி 1 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது.

இங்கு இந்த மாத இறுதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மாண்டி மாவட்ட விவசாயிகள் தண்ணீர் தேங்காமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement