பூட்டியிருந்த வீட்டில் தீ
நொய்டா:புதுடில்லி அருகே நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஊதுபத்தியால் வீடு தீப்பற்றி எரிந்தது.
நொய்டா 62வது செக்டாரில் உள்ள லாவண்யா அடுக்குமாடி குடியிருப்பில் தரைத்தள வீடு நேற்று காலை 9:30 மணிக்கு தீப்பற்றி எரிந்தது. தகவல் அறிந்து இரண்டு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ எரிந்த போது அந்த வீட்டில் யாரும் இல்லை. வெளியில் பூட்டியிருந்தது. அதிகாலையில் ஏற்றிய ஊதுபத்தி கீழே விழுந்து அதன் வாயிலாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!