மதுபான கொள்கை ஊழல் வழக்கில் வீடுகள் உட்பட சொத்துக்கள் முடக்கம்
புதுடில்லி:அரசின் புதிய புதிய மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக, புதுடில்லி மற்றும் மஹாராஷ்டிராவின் மும்பை ஆகிய நகரங்களில் வீடுகள், ஹோட்டல்கள், 50 வாகனங்கள் மற்றும் 76.54 கோடி ரூபாய் வங்கி டெபாசிட் ஆகியவற்றை அமலாக்கத் துறை முடக்கியது.
இதுகுறித்து, அமலாக்கத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுடில்லி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் நடந்த ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் விஜய் நாயர், தொழிலதிபர் சமீர் மஹந்த்ரு, அவரது மனைவி மற்றும் அவரது நிறுவனமான இன்டோ ஸ்பிரிட் குழுமம், தொழிலதிபர்கள் தினேஷ் அரோரா, அருண் பிள்ளை, அமித் அரோரா, உள்ளிட்டோரின் வீடுகள், ஹோட்டல்கள், 50 வாகனங்கள் மற்றும் வங்கியில் டெபாசிட் செய்திருந்த 76.54 கோடி ரூபாய் ஆகியவை முடக்கப்பட்டு உள்ளன.
இந்த வழக்கில் பணமோசடி நடந்திருப்பதாகவும் சி.பி.ஐ., பதிவு செய்துள்ள வழக்கில் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில், புதுடில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் கலால் துறை அதிகாரிகள் மீதும் சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது.
சிசோடியா மற்றும் அதிகாரிகள், மதுபான கொள்கை 2021 - -22 தொடர்பான முடிவுகளை தகுதியான அதிகாரியின் ஒப்புதல் இல்லாமல், லைசென்ஸ்தாருக்கு சலுகைகளை வழங்கும் நோக்கத்துடன் பரிந்துரை செய்திருந்ததாக சி.பி.ஐ., தன் வழக்கில் குற்றம் சாட்டியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!