ADVERTISEMENT
காஞ்சிபுரம்:இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 13வது தேசிய வாக்காளர் தினம், நேற்று நாடு முழுதும் கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, சின்ன காஞ்சிபுரம் பச்சையப்பன்கிளை இடைநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் தலைமையில், தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
இதில், பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் ஆகியோர், ''மக்களாட்சியின் மீது பற்றுடைய இந்திய குடிமக்களாகிய நாம், நம்முடைய நலன் கருதும் மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களில், மாண்பையும் நிலை நிறுத்துவோம்.
''ஒவ்வொரு தேர்தலிலும், அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும், அல்லது எந்தவொரு துாண்டுதலுமின்றியும் ஓட்டளிப்போம்,'' என, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!