ADVERTISEMENT
புதுக்கோட்டை:ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் மலைபிரதேசங்களில் மட்டுமே விளையக்கூடியது மிளகை, சமதளத்தில் வறட்சி பகுதியிலும் நன்றாக விளையும் மிளகு சாகுபடியை புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாடு, கொத்தமங்கலம், சேந்தன்குடி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் புதுமையான பல்வேறு விவசாயங்களை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, மலைப்பிரதேசப் பயிரான மிளகை சமதளத்தில் வறட்சி பகுதியிலும் பல ஏக்கரில் பயிரிட்டு அதிக சுவையுடைய மிளகை மகசூல் செய்து வருகின்றனர்.
சமதளத்தில் மிளகு விவசாயம் தொடர்பான செய்திகளை அறிந்த புதுச்சேரி மாநில வேளாண்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது கட்சி சார்ந்த பிரமுகர்கள் வடகாடு பகுதியில் உள்ள பால்சாமி என்ற விவசாயியின் தோட்டத்தில் உள்ள மிளகு சாகுபடியை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, கொடி மிளகு, செடி மிளகு உள்ளிட்ட மிளகு சாகுபடிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர் ஜெயக்குமார், குறிப்பிட்ட மிளகு செடிகள் வாங்கி சென்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம், வேண்மைதுறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
மலைப்பிரதேச பயிர் என கூறி வந்த மிளகு பயிர்களை வடகாடு பகுதி விவசாயி பால்சாமி சமதளத்தில் விளைய வைத்து இருப்பது அசாத்தியமானது. இது போன்ற விவசாயத்தை புதுச்சேரியின் விவசாயிகளுக்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில் தான் பிப், 10, 11, 12 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் நடைபெற உள்ள விவசாயிகள் திருவிழா மற்றும் மலர் கண்காட்சியில் மிளகு விவசாயத்தை சமதளத்தில் சாத்தியமாக்குவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட உள்ளது.
அதன் காரணமாகவே முன்னோடி விவசாயிகள் சிலரோடு தானே நேரடியாக வந்து பார்வையிட்டு வருவதாகத் தெரிவித்தார். அத்தோடு மட்டுமில்லாமல், எதிர்கட்சியின் ஊடகங்களே பாராட்டும் அளவிற்கு புதுச்சேரி அரசின் வேளாண் துறை இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. பல்வேறு முன்னுதாரணமான செயல்களை புதுச்சேரி வேளாண் அமைச்சகம் செய்து வருகிறது. இந்த மிளகு விவசாயத்தில் ஆர்வத்துடன் களமிறங்கும் புதச்சேரி விவசாயிகளுக்கு, புதுச்சேரி அரசு மானியம் வழங்கி, ஊக்குவிக்க உள்ளது.
மேலும், புதுச்சேரியில் உள்ள விவசாய நுணுக்கங்களையும், அதன் சார்ந்த தொழில் நுட்பங்களையும் மற்ற மாநிலத்தவர்களும் வந்து அறிந்து கொள்ளலாம் என்று இவ்வாறு கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அருமை. மலைப் பிரதேசங்களில் மட்டுமே விளையும் மிளகை சமதளத்திலும் விளைவித்துக் காட்டிய விவசாயி பாராட்டுக்குரியவர். இதே போல் மற்ற ஸ்பெசஸ்- நறுமணப் பொருட்களையும் தயாரிக்க அரசு இவரை ஊக்குவிக்க வேண்டும்