வங்கியில் ஒலிபெருக்கி வேண்டும்
உத்திரமேரூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், வங்கிக் கணக்கு புத்தகத்தில், பரிவர்த்தனை விபரங்களை பதிவு செய்ய அமைக்கப்பட்டுள்ள தானியங்கி 'பிரிண்டிங்' இயந்திரம் கடந்த இரு ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் உள்ளது.
இதனால், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக் கணக்கில் உள்ள பணப் பரிவர்த்தனை விபரங்களையும், பிறருக்கு வழங்கிய காசோலை, 'கிளியரிங்' ஆகிவிட்டதை உறுதிசெய்ய முடியவில்லை. இதனால், காசோலை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களும், ஓய்வூதியம் பெறும் முதியோரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
-ஜெ.விவேகானந்தன், உத்திரமேரூர்.
குப்பையால் சுகாதார சீர்கேடு
காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் வடக்கு மாட வீதியில், அப்பகுதிவாசிகள் சாலையோரம் கொட்டும் குப்பையை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக அகற்றுவதில்லை. இதனால், குவியலாக கிடக்கும் குப்பையை நாய், மாடு உள்ளிட்டவை கிளறுகின்றன.
உணவு சாப்பிடுவதில், மாடுகளுக்குள் சண்டை ஏற்படும்போது ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக்கொள்வதால் நடந்து செல்வோர் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது. மேலும், காற்றில் பறக்கும் குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, குப்பையை முறையாக அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.நீலகண்டன், காஞ்சிபுரம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!