ADVERTISEMENT
புதுடில்லி: நாம் நட்சத்திரத்திலும் கால்பதி்ப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என ஜனாதிபதி திரவுபதி முர்மு , குடியரசு தின செய்தி வெளியிட்டு உரையாற்றினார்.
நாளை (ஜன. 26) குடியரசு தின விழா நாடு முழுதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை வருமாறு:

குடியரசு தினத்தை கொண்டாடும் இந்நேரத்தில் இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்க துணை நின்ற அனைவருக்கும் நன்றி. இந்தியாவின் பயணம் பல நாடுகளுக்கு உத்வேகம் அளித்துள்ளது. மகாத்மா காந்தியின் குறிக்கோளின் படி அவரது வழியில் நாம் சுதந்திரத்தை அடைந்தோம். நாம் ஜனநாயக குடியரசாக வெற்றி பெற்றிருக்கிறோம். இது தான் நமது இந்தியாவின் சாரம்சம். நமது நாகரீகம் பழமையானது. நவீன ஜனநாயகம் இளமையானது.
ககன்யான் திட்டம் மூலம் நமது நாடு மனிதர்களை ஏற்றிச் செல்லும் விண்கலத்தை ஏவ உள்ளது. நாம் நட்சத்திரத்தில் கூட கால் பதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. மதங்களும் , மொழிகளும் நம்மை ஒன்றிணைத்துள்ளன. இளம் பெணகள் கல்வி உள்ளிட்ட துறைகளில் பங்களிப்பது என்னை ஆச்சர்யப்படுத்துகிறது.
மத்திய அரசு திட்டங்கள் பல ஏழை எளிய மக்களுக்கு பலன்களை அளிப்பதாக உள்ளது. கரீப் கல்யாண் யோஜனா திட்டம் தொற்று நோய் காலங்களில் ஏழைகளுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. நமது அரசியல் சாசனம் கடந்த காலம், நிகழ் காலம் , எதிர்காலத்தில் என எப்போதும் வழிகாட்டியாக இருக்கிறது. .
நமது அரசியல் சாசனத்தை பின்பற்றுவது தான் நமது கடமை. நமக்கு அரசியல் சாசனத்தை வழங்கிய அம்பேத்கருக்கு நாம் நன்றி உள்ளவர்களாக இருப்போம்.அரசியலமைப்பு சட்டம் வந்தநாள் முதல் இன்று வரை ஆச்சர்யத்தை தருகிறது.அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் தொலைநோக்குபார்வை இந்தியாவை நம்பிக்கையான தேசியமாக மாற்ற வழிவகுத்தது. இவ்வாறு உரையாற்றினார்.
வாசகர் கருத்து (6)
நட்சத்திரத்தில் கால் ஊன்ற இயலாது. மிக அருகில் இருக்கும் ப்ராக்ஸிமா செண்டாரி 4 ஒளியாண்டுகள் தொலைவு. அங்கு செல்ல இப்போதிருக்கும் ராக்கட் வசதியை வைத்து ஒரு லட்சம் ஆண்டுகள் ஆகும். மேலும் சந்திரனில் கூட கால் வைப்பது வீண் செலவே. அதனால் இந்தியர்களுக்கு ஒரு பயனும் இல்லை. ஸ்தாலின் திராவிட மாடல் என்று பட்ஜெட் உரையில் கதையளந்ததை போல தான் இதுவும்.
ஹிஹிஹி .. குன்றிய அறிவு .. பிரகாசமா இருக்கு..
நட்சத்திரத்திலும் நாங்கள் (காங்கிரஸ் மற்றும் கூட்டணி காட்சிகள்) ஊழல் செய்வோம்.
நவக்கிரகம்ன்னும்.. நட்சத்திரம்ன்னும் நீங்க கட்டாத கதையா, அடிக்காத கொள்ளையா..
நட்சத்திரம் என்பது நெருப்பு பந்து. ஆயினும் இங்கே அது உயர்ந்த லட்சியங்களை குறிக்கிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நக்ஷத்திரம் என்றால் என்ன என்று மறந்தே போச்சு. ஒரு சமயம், சினிமா ஸ்டாராக இருக்குமோ. திருட்டு கட்சியின் சாயல் அடிப்பது போல இருக்கிறதே. மேயரிடம் " அடிச்சி விடு " என்று சொன்னது போல யாராவது சொல்லி இருப்பார்களோ.