ADVERTISEMENT
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மைக்ரோசாப்ட் சேவைகள் முடங்கியது. இந்தியாவில் இன்று காலை சேவை முடங்கிய நிலையில், தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மைக்ரோசாப்ட் டீம்ஸ், அவுட்லுக், மைக்ரோசாப்ட் 365 சேவைகள் இன்று முடங்கின. இந்தியாவில் பல பகுதிகளில் முடங்கியதால், மின்னஞ்சல் சேவை உள்ளிட்டவற்றை பயன்படுத்த முடியாமல் பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.
இந்தியாவில் மைக்ரோசாப்ட் டீம்ஸ், அவுட்லுக் சேவைகள் முடக்கம் சுமார் ஒருமணி நேரம் நீடித்தது. பின்னர் சரி செய்யப்பட்டு , தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. . சேவைகள் முடக்கம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மைக்ரோசாப்ட் தெரிவித்திருந்தது.
இதனிடையே பாதிக்கப்பட்ட பயனர்கள் டிவிட்டரில் #Mircrosoftdown என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்தனர். மறுபுறம், குறும்புக்கார நெட்டிசன்கள் பலர், கார்ப்பரேட் நிறுவனங்களில் முடக்கத்தை ஊழியர்கள் எப்படி எதிர்கொள்வர் என்பதை நகைச்சுவை மீம்ஸ்களாக பகிர்ந்தனர். அதில் ஒருவர், அக்ஷய்குமார் கண்களை கசக்கி கொண்டு அழுவது போல, நக்கலாக சிரிக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

மற்றொருவர், நாசாவில் ராக்கெட் விண்ணில் செலுத்தியதை ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து கொண்டாடும் புகைப்படத்தை பகிர்ந்து, ஒவ்வொரு கார்ப்பரேட் ஊழியரும் இந்த மனநிலையில் இருப்பார்கள் என பதிவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஆனைக்கும் அடி சறுக்கும்