Load Image
Advertisement

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

பூமிக்கு அருகே விண்கல்


பூமியின் மேற்பரப்பில் இருந்து 3379 கி.மீ., தொலைவில் '2023 பி.யு.' என்ற விண்கல் நாளை (இந்திய நேரம்: ஜன. 27 காலை 6:00 மணிக்கு) கடந்து செல்கிறது. இது மணிக்கு 53,591 கி.மீ., வேகத்தில் சுற்றுகிறது. இது 2023 ஜன. 21ல் கண்டறியப்பட்டது. அகலம் 27.8 அடி. நீளம் 12.4 அடி. பெரும்பாலான விண்கல் நிலவுக்கு அப்பால் (பூமியில் இருந்து 3.86 லட்சம் கி.மீ., தொலைவு) கடந்து செல்லும். ஆனால் 300 ஆண்டுகளில் இல்லாத வகையில் பூமிக்கு அருகே (3379 கி.மீ.,) இது கடக்க உள்ளது. விண்கல் வரலாற்றில் பூமிக்கு அருகே குறைந்த தொலைவில் கடக்கும் நான்காவது விண்கல் இது.

தகவல் சுரங்கம்

உலக சுங்கதுறை தினம்


உலக சுங்கத்துறை கழகம் 1952 ஜன. 26ல் தொடங்கப் பட்டது. இந்த அமைப்பில் 183 நாடுகள் உறுப்பினராக உள்ளன. இதன் தலைமையகம் பெல்ஜியத்தின் பிரஸ்செல்ஸ் நகரில் உள்ளது. அனைத்து நாடுகளிலும் சுங்கத் துறை உள்ளது. இத்துறை அதிகாரிகளின் சேவை முக்கியமானது. போதைப்பொருள், தங்கம் உட்பட சட்ட விரோத கடத்தலை தடுப்பது, சுற்றுச்சூழல் பாதுகாத்தல், நாட்டின் நலனை பாதுகாத்தல் உட்பட பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இவர்களை பாராட்டும் விதமாக ஆண்டுதோறும் ஜன. 26ல் உலக சுங்கத்துறை தினம் கடைபிடிக்கப்படுகிறது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement