ADVERTISEMENT
திண்டுக்கல்: ஆவின் டீ கடையில் விற்பனை செய்த உளுந்த வடையில் 'ஈ' இறந்து கிடந்ததால் உணவு பாதுகாப்பு துறையினர் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல் சப் கலெக்டர் ஆபிஸ் ரோடு வணிகவரி அலுவலகம் அருகே ஆவின் டீ கடை செயல்படுகிறது.இதை திண்டுக்கல்லை சேர்ந்த விவேக்33,என்பவர் நடத்துகிறார்.இங்கு வாடிக்கையாளர்கள் சிலர் டீ குடிக்க வந்தனர்.அப்போது டீ,உளுந்த வடை போன்றவைகளை வாங்கி சாப்பிட்டனர்.அப்போது உளுந்த வடையை சாப்பிடும் போது அதனுள் 'ஈ' இறந்து கிடந்தது.இதை பார்த்த வாடிக்கையாளர் ஒருவர் அங்கிருந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.உணவு பாதுகாப்பு துறை அலுவலர் செல்வம் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர்.
அப்போது டீ கடையில் சுகாதாரமற்ற முறையில் திறந்த வெளியில் உணவு பொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.உளுந்த வடையில் 'ஈ' இறந்து கிடந்ததும் உறுதி செய்யப்பட்டது. மேலும் கடையில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆவின் டீ கடை நடத்தி வந்த விவேக்கிற்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செல்வம் கூறியதாவது:பொது மக்களுக்கு நோய் தொற்றுகளை பரப்பும் வகையில் வியாபாரிகள் சுகாதாரமற்ற முறை யில் வியாபாரம் செய்ய கூடாது.உணவு பொருட்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.திறந்த வெளியில் உணவு பொருட்களை வைத்திருக்க கூடாது,என்றார்.

வாசகர் கருத்து (2)
ஒருகடையில் ஒருநாள் ஆய்வு செய்து அபராதம் விதிப்பதால் சுகாதாரம் சீர்ரடையாது. தமிழகம் முழுவதும் நடைபாதை கடைகள் இதே லட்சணம் தான். மக்கள் வாங்குவதை நிறுத்திக்கொண்டால் தான் மேம்படும்..
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
In Tamil nadu many Tea shops are running in un Hygienic conditions, it is also better to test the oil used to prepare the Snacks.