அஞ்சலக அரசு முத்திரை: தவறாக பயன்படுத்திய 6 பேர் மீது வழக்கு பதிவு
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி பொறியாளர் கணேசனிடம், டெண்டர் தொடர்பான அஞ்சலக முத்திரையுடன் கூடிய கடிதத்தை, ஆற்காடு நகர அ.தி.மு.க., செயலாளர் சங்கர், 56, கடந்த 20 ம் தேதி கொடுத்தார்.
போஸ்ட்மேன் கொடுக்க வேண்டிய கடிதத்தை அ.தி.மு.க., செயலாளர் சங்கர் கொடுத்ததால் சந்தேகமடைந்த பொறியாளர் கணேசன் ஆற்காடு தபால் அதிகாரிகளிடம் புகார் செய்தார். அரக்கோணம் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் சிவசங்கரன் விசாரணை நடத்தினார்.
அதில், ஆற்காடு தற்காலிக தபால் ஊழியர்கள் ஜெய்சிங், 50, பிச்சை, 51, ஆகியோர் அ.தி.மு.க., செயலாளர் சங்கரிடம் 2 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு, அவர் கொடுத்த தபாலுக்கு பழைய தேதியிட்டு அஞ்சல் முத்திரையிட்டு அவரிடமே கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து தற்காலிக தபால் ஊழியர்கள் ஜெய்சிங், பிச்சை ஆகியோரை பணிநீக்கம் செய்து அரக்கோணம் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் சிவசங்கரன் உத்தரவிட்டார். அஞ்சலக அரசு முத்திரையை தவறாக பயன்படுத்திது குறித்து பொறியாளர் கணேசன் ஆற்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், ஆற்காடு நகராட்சியில் கால்வாய் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டது. நிறைய பேர் டெண்டர் கேட்டு விண்ணப்பித்தனர். டெண்டர் தேதி கடந்த 18 ல் முடிந்து விட்டது. இதனால் அ.தி.மு.க., நகர செயலாளர் சங்கர் என்பவர் தற்காலிக தபால் ஊழியர்கள் ஜெய்சிங், பிச்சை ஆகியோர் ஒத்துழைப்புடன் டெண்டர் கடிதத்ததில் பழைய தேதியிட்ட (17) அஞ்சலக முத்திரை போட்டு பொறியாளர் கணேசனிடம் கொடுத்ததும், இதற்கு ஆற்காடு அ.தி.மு.க., பிரமுகர்கள் சேதுமாதவன், 50, ராஜேந்திரன், 54, பிச்சாண்டி, 40, ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, சங்கர் உள்ளிட்ட ஆறு பேர் மீது 5 பிரிவுகளில் ஆற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனால் தலைமறைவாகிவிட்ட அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!