வேலூர் புதிய பஸ் ஸ்டாண்டில் கடைகள் 5 வது முறையாக ஏலம் தள்ளி வைப்பு
வேலுார்: வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டில் 85 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இதில் வணிக நோக்கத்திற்காக 74 கடைகள் ஏலம் விட்டு வாடகை கட்டணம் நிர்ணயிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஏற்கனவே நான்கு முறை ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ( 25) ம் தேதி காலை 10:00 மணிக்கு ஏலம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் ஏலம் ஐந்தாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளை கேட்டதற்கு, நிர்வாக காரணங்களுக்காக கடைகள் ஏலம் ரத்தாகி உள்ளது. வரும் 27 ம் தேதி ஏலம் நடைபெறும் என்று கூறினர்.
ஆனால் ஏலம் ஐந்தாவது முறையாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளை கேட்டதற்கு, நிர்வாக காரணங்களுக்காக கடைகள் ஏலம் ரத்தாகி உள்ளது. வரும் 27 ம் தேதி ஏலம் நடைபெறும் என்று கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!