Load Image
Advertisement

பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க 38 லட்சம் மாணவர்கள் பதிவு

தேர்வு பயத்தை போக்கும் வகையில் நடத்தப்படும் 'பரீட்சா பே சர்ச்சா' என்ற பிரதமர் நரேந்திர மோடியுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க, ௩௮ லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

தேர்வு பயத்தை போக்கும் வகையில், பரீட்சா பே சர்ச்சா என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை, பிரதமர் மோடி, ௨௦௧௮ல் இருந்து நடத்தி வருகிறார். இதன் ஆறாவது ஆண்டு நிகழ்ச்சி, நாளை மறுநாள் புதுடில்லியில் நடக்க உள்ளது.

இது குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:

பிரதமருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க, ௩௮ லட்சம் மாணவர் பதிவு செய்துள்ளனர். இது கடந்தாண்டைவிட, ௧௩ லட்சம் அதிகமாகும். நிகழ்ச்சியில் பிரதமருடன் பங்கேற்க உள்ள தேர்ந்தெடுக்கும் மாணவர்களில் சிலர், குடியரசு தின விழாவில் பங்கேற்பர். இதைத் தவிர புதுடில்லியில் உள்ள மஹாத்மா காந்தி நினைவிடம், பிரதமர் அருங்காட்சியம் உள்ளிட்டவற்றை பார்வையிடுவர்.

இதன் மூலம் நம் நாட்டின் செழுமையான வரலாறு குறித்து அவர்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement