Load Image
Advertisement

ஜம்முன்னு இருக்கு ஜாவா 42 தவாங்..ஆனா இங்க கிடைக்காது!

Jawa 42 Tawang edition launched in India ஜம்முன்னு இருக்கு ஜாவா 42 தவாங்..ஆனா இங்க கிடைக்காது!
ADVERTISEMENT
ஜாவாயெஸ்டி மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் புதிய ஜாவா 42 பைக்கில் 42 என்ற ஸ்பெஷல் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

1970 மற்றும் 80 களில் மிகவும் புகழ்பெற்ற இருசக்கர வாகனமாக விளங்கிக் கொண்டிருந்தவற்றில் ஜாவா நிறுவனத்தின் மோட்டார் சைக்கிள்களும் ஒன்று. நீண்ட இடைவேளிக்கு பிறகு ஜாவா நிறுவனத்தின் புதிய பைக்குகள் இந்திய சந்தையில் அமோக விற்பனையாகி வருகின்றது. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பைக்காக விளங்கும் ஜாவா பைக்கில் ஏராளமான மாடல்கள் வரத்தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் ஜாவா கிளாசிக், ஜாவா பெராக், ஜாவா 42, ஜாவா 42 பாபர், என பல்வேறு மாடல்கள் உள்ளன. இதைத்தொடர்ந்து தற்போது இந்நிறுவனம் தனது ஜாவா 42 பைக்கில் தவாங் என்ற ஸ்பெஷல் எடிஷனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.

Latest Tamil News

தவாங் என்பது அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மொன்பா சமூகத்தினரால் அவர்களது புதிய வருடத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். வடகிழக்கு பகுதிகளின் கலாசாரத்தை பரைசாற்றும் வகையிலும், இயற்கை அழகை கொண்டாடும் வகையிலும் இந்த லிமிடெட் எடிஷன் மாடல் அறிமுகமாகி இருக்கிறது. எனவே இந்த லிமிடெட் எடிஷன் பிரத்யேகமாக அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மட்டுமே கிடைக்கும் எனக்கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், புதிய ஜாவா 42 தவாங் பைக்கை மொத்தமாகவே வெறும் 100 யூனிட்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Latest Tamil News
தோற்றத்தில் இந்த மாடல் அதன் ஸ்டாண்டர்டு எடிஷனான ஸ்போர்ட்ஸ் ஸ்ட்ரிப் ஆல்ஸ்டார் ப்ளாக் வேரியண்ட்டின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முன்பக்க மட்கார்ட்டிலும், பெட்ரோல் டேங்கிலும் திபெத்திய கதைகளில் வரும் கற்பனை கதாபாத்திரமான லுங்க்டா எனப்படும் காற்று குதிரையின் படம் பொறிக்கபட்டுள்ளது. இதுதவிர, வடகிழக்கு இந்தியாவின் கலாச்சாரத்தை சுட்டிக்காட்டும் அம்சங்களும் பைக்கை சுற்றிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

Latest Tamil News
செயல்திறனை பொறுத்தவரை ஜாவா 42 பைக்கில் 294.72சிசி, சிங்கிள்-சிலிண்டர், லிக்யுடு-கூல்டு, ஃப்யுல்-இன்ஜெக்டட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 27 பிஎச்பி மற்றும் 26.84 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். அதுபோக இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மேலும் 18-17 இன்ச் அலாய் வீல்கள், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டூயல் ஸ்ப்ரிங் சஸ்பென்ஷன் உள்ளது.

Latest Tamil News
புதிய டவங் எடிஷன் விலை அதன் ஸ்டாண்டர்டு மாடலை விட ரூ. 20 ஆயிரம் அதிகமாக இருக்கிறது. அந்த வகையில் ஜாவா 42 டவங் எடிஷன் விலை ரூ. 1,94,142, (எக்ஸ்-ஷோரூம் விலை) ஆகும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement