காட்டு யானை தாக்கி வனத்துறை வாகனம் சேதம்
கூடலூர்: நீலகிரி மாவட்டம், கூடலூர் தேவர்சோலை சுற்றுவட்டார பகுதிகளில் முகாமிட்டு, விவசாய பயிர்களை நாசம் செய்து; வாகனங்கள், வீடுகளையும் சேதப்படுத்தி வரும் காட்டு ( மக்னா ) யானையை விரட்டும் பணியில் வன ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், யானை தேவர்சோலை அருகே, கொட்டாய்மட்டம் பகுதியில் இன்று (ஜன., 25) முகாமிட்டது தெரியவந்தது. மாவட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவுபடி, வனச்சர்கள் ராதாகிருஷ்ணன் தலைமையில் 20 க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள், அதனை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
பிற்பகல், அதனை வனத்துறை வாகனம் மூலம் விரட்டி சென்றனர். வாகனத்தை வேட்டை தடுப்பு காவலர் ராஜ்குமார் ஓட்டி சென்றார். திடீரென திரும்பிய யானை, வாகனத்தின் முன் பகுதியை தாக்கி சேதப்படுத்தியது. வன ஊழியர்கள் சத்தமிட்டு யானை விரட்டி, வாகனத்தில் இருந்த ஐந்து பேரை காப்பாற்றினார்.
யானை தாக்கியதில் வனத்துறை வாகனத்தின் முன் பகுதி, முகப்பு விலங்குகள் சேதம் அடைந்தது. இச்சம்பவத்தால் வன ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும், தொடர்ந்து யானையை விரட்டும் பணியில் ஈடுப்பட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!