வேலைக்கு வராத மகனை அரிவாளால் வெட்டிய தந்தை
மயிலாடுதுறை அருகே தன்னுடன் செங்கல் சூளை வேலைக்கு வராத மகனை, அரிவாளால் வெட்டிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை அருகே உள்ள ஊத்துக்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 60; செங்கல் சூளை தொழிலாளி. இவரது மகன் அருள்பாண்டியன், 25; கூலி தொழிலாளி.
சில மாதங்களாக ஏழுமலை தான் வேலை செய்யும் செங்கல் சூளையில் உதவியாக வேலைக்கு வரும்படி மகன் அருண்பாண்டியனை கூப்பிட்டுள்ளார். அவர் மறுத்து விட்டு, வேறு இடத்தில் கூலி வேலைக்கு சென்றுள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த அருண்பாண்டியன், தாய் லதாவிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது மது போதையில் இருந்த ஏழுமலை, 'வேலைக்கு வர மறுக்கும் நீ ஏன் இங்கு சாப்பிட வந்தாய்' என கேட்டு, அரிவாளால் அருண்பாண்டியனை வெட்டியுள்ளார்.
தலை, கால்களில் காயம் அடைந்த அருண்பாண்டியன் மயங்கி விழுந்தார். பதறிய தாய் லதா மற்றும் உறவினர்கள் அருண்பாண்டியனை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மயிலாடுதுறை போலீசார் ஏழுமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!