ADVERTISEMENT
'டிவி' தொடர் படப்பிடிப்பின்போது, நடிகரின் விலை உயர்ந்த மொபைல் போனை 'ஆட்டை' போட்டு தலைமறைவான பெண்கள் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை, புழுதிவாக்கம், பாலாஜி நகர், வில்லேஜ் சாலையைச் சேர்ந்தவர் அழகப்பன், 33. இவர், 'சன் டிவி'யில் தினமும் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும், 'ஆனந்தராகம்' தொடரில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், அந்த தொடரின் படப்பிடிப்பு, நேற்று முன்தினம், பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள, ரேவதி ஸ்டோரில்நடந்தது.
அதில், அழகப்பன் மற்றும் அவருடன் நடிப்போர் பங்கேற்றனர். படப்பிடிப்பின் போது, அவர் தன் 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை, தான் அமர்ந்திருந்த இடத்தில் வைத்து நடிக்கச் சென்றார்.
சில நிமிடங்களுக்கு பின், மீண்டும் அந்த இடத்திற்கு சென்று பார்த்த போது, மொபைல் போன் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து விசாரிக்கும் திரு.வி.க., நகர் போலீசார், அந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது, அங்கு வாடிக்கையாளர் போல் வந்த, இரண்டு பெண்கள், அழகப்பனின் மொபைல் போனை திருடிச் சென்றது தெரியவந்தது. போலீசார், அந்த பெண்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!