ADVERTISEMENT
டயர் வெடித்த அரசு பஸ், 'டூ வீலர்' மீது மோதியதில் இருவர் பலியாகினர்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிப்பட்டினம் அருகேவுள்ள குலசேகரகாலைச் சேர்ந்த முனியசாமி, நேஷாந்த்குமார், 'பால்ஸ் சீலிங்' மற்றும் கட்டட உட்புற அலங்கார கட்டுமான பணி செய்து வந்தனர்.
நேற்று மதியம் இருவரும் ஒரே டூ வீலரில் ஊரில் இருந்து ராமநாதபுரம் சென்றனர். நேஷாந்த்குமார் 'ஹெல்மெட்' அணியாமல் டூ வீலரை ஓட்டினார்.
தேவிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை மரப்பாலம் அருகே திரும்பிய போது, சிவகங்கையில் இருந்து ராமநாதபுரம் சென்ற அரசு பஸ் டூ வீலர் மீது மோதியது.
இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். போலீசார் விசாரிக்கின்றனர். முன்னால் சென்ற டூ வீலர் திடீரென திரும்பியதால், பஸ் டிரைவர் உடனடியாக பிரேக் அழுத்தியதில், பஸ்சின் முன்பக்க டயர் வெடித்து, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து டூ வீலர் மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!