ADVERTISEMENT
புதுடில்லி: உலகின் எதிர்காலத்திற்காக இந்தியா பாடுபடுகிறது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு, என்சிசி என்எஸ்எஸ் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

அப்போது மோடி பேசியதாவது: வளர்ந்த இந்தியாவின் சிறந்த பயனாளர்களாக நீங்கள் இருக்க போகிறீர்கள். இதன் எஞ்சிய பகுதியை கட்டமைக்க போகும் மிகப்பெரிய பொறுப்பு உங்களது தோள்களில் உள்ளது.

இளைஞர்களுடன் கலந்துரையாடுவது முக்கியமானது. உலகின் நலனுக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது. செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியாவில் சிறந்து விளையாட்டுக்கான சூழல் உள்ளது. தூய்மை இந்தியா இயக்கத்தை உங்கள் இயக்கமாக மாற்றுங்கள். இவ்வாறு பிரதமர் பேசினார்.

வாசகர் கருத்து (8)
இந்தியாவில் அரசாங்கத்துறையில் எல்லாம் நஷ்டம் ஆகிறது என்று கூறிக்கொண்டு எல்லாவற்றையும் அம்பானி மற்றும் அதானி போன்ற மிகப்பெரும் கோடீஸ்வரர்களிடம் விட்டு விட்டு தனியார் மயமாக்கிவிட்டால் அரசாங்கம் எதற்கு
அருமை.. அருமை. உங்கள் பேச்சு என்றும் அருமை.. எங்களுக்கு அதில் என்றும் பெருமை மோடிஜி அவர்களே. நாட்டின் நலன், வளர்ச்சி, முன்னேற்றம் என்பதோடு நின்று விடாமல் உலக ஷேமத்தைப்பற்றியும் கவலைப்படும் நீங்கள் ஒரு உலக மஹா புருஷர் என்பதில் சந்தேகமில்லை..
ayoo mdiyala
அது சரி உலகின் எதிர்காலம் ஒரு புறம் இருக்கட்டும் ,இந்தியாவில் சாமானிய மக்களின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது... .
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பேச்சுத் தான் அருமையா இருக்கு... .