Load Image
Advertisement

பிபிசி ஆவணப்படத்தை திரையிட முயற்சி: டில்லி ஜாமியா பல்கலை.,யில் அதிரடிப்படை போலீசார்

Tamil News
ADVERTISEMENT

புதுடில்லி: பிரதமர் மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை டில்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலையில் திரையிட முயற்சி நடக்கிறது. இதனை தடுப்பதற்காக அங்கு வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இடதுசாரி மாணவர் சங்கத்தை சேர்ந்த 4 பேரை போலீசார் பிடித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆவணப்படத்தை பேஸ்புக் மூலம் திரையிட போவதாக மாணவர் சங்கம் அறிவித்தது. ஆனால், அதற்கு தடை விதித்த பல்கலை, அனுமதி பெறாமல் யாரும் கூடக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆவணப்படம் திரையிடப்படுவதை தடுக்கும் பொருட்டு, வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன.

Latest Tamil News
மாணவர் சங்கத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கலவர தடுப்பு போலீசார் பல்கலை வாயில் அருகில் வாகனங்களுடன் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

எச்சரிக்கைஇது தொடர்பாக பல்கலை துணைவேந்தர் நஜ்மா அக்தர் கூறுகையில், எஸ்எப்ஐ எனப்படும் ' இந்திய மாணவர் கூட்டமைப்பு' ஆனது, பல்கலையில் நிலவும் அமைதியை கெடுக்க நினைக்கிறது. இதனை அனுமதிக்க முடியாது. பல்கலை வளாகத்தில் நிலவும் அமைதியை கெடுக்க நினைத்தால், மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


இதேபோன்று, நேற்று ஜவஹர்லால் நேரு பல்கலையில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது, மின்சாரம் மற்றும் இணைய சேவை ரத்து செய்யப்பட்டது.
இதனால், மாணவர்கள் லேப்டாப்கள் மற்றும் மொபைல்போன் மூலம் அந்த ஆவணப்படத்தை பார்த்தனர். பல்கலை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தினர்.

ஆவணப்படத்தை ஒளிபரப்பினால், நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த பல்கலை நிர்வாகம், இந்த ஆவணப்படத்தால் சமூக நல்லிணக்கம் கெடும் என எச்சரித்தது.

news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (8)

 • Sivagiri - chennai,இந்தியா

  இப்டி எல்லாம் அந்த டிவி சேனலுக்கு முக்கியத்துவம் கொடுத்து - விளம்பரம் தேடி கொடுக்க தேவை இல்லை - - நூற்றுக்கணக்கான சேனல்களில் அதுவும் ஒன்று - என்று விட்டு விட்டால் அது தானாக ஓரமா ஒதுங்கி சென்று மறைந்து விடும் . . . எதோ பெரிய அறிவாளி போல ஆக்ட் பண்ணிக்கொள்ளும் அந்த சேனல் கிறுக்கன்களை - அறிவாளிகளாக ஆக்க வேண்டியதில்லை . . .

 • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

  இவர்கள் காசுமீர் பைல்ஸ் படத்திற்கு வரி விளக்கு கொடுத்து பார்க்க செய்வார்கள் இவர்களுக்கு எதிரான கருத்து என்றால் தடை

  • S SRINIVASAN - ,

   BAN BAN BAN BBC IN INDIANO USELESS CHANNEL HAVE RIGHT TO TELECAST ANY INDIAN PM FALSELY FOR THEIR PUBLICITYJUST BAN BAN BAN

 • SUBBU,MADURAI -

  India is not a superpower, yet. But it is the fifth largest economy, ready to play in the big leagues. And those in the big leagues do not like to see a new kid on the block. They will do absolutely anything it takes to stop us. And they have their army of activists right inside our borders This should bother us. One year For general election (2024) remaining so more narrative More false story Will come up!

 • GMM - KA,இந்தியா

  BBC யின் (கறுப்பு) கருத்து சுதந்திரம். ?சுதந்திரம் எல்லைக்குள் இருக்க வேண்டும் என்பதை வரையறுக்க உதவும். ஒரு பக்க ஆவண படம்? கரசேவை மக்கள் கொல்லப்பட்டது பற்றி ஆவணம் இல்லை. கோவை குண்டு வெடிப்பு, பம்பாய் தாக்குதல், கோவை ஊசி குண்டு வெடிப்பு, உயிருடன் கழுத்து அறுப்பு... எந்த நிகழ்வையும் பிபிசி குழு ஆவணப்படுத்த முடியவில்லை. பணியில் உள்ள நாட்டின் பிரதமர் பற்றி ஆவணம் கிடைத்து விட்டது. இதனை மானம், வெட்கம் இல்லாமல் சிலர் மறு பரப்பு, பதிப்பு, ட்வீட், செய்து மகிழ்கின்றனர்.?

 • அநாமதேயம் - ,

  இந்த நாய்களுக்கு நாட்டுப்பறாறு இல்லை.ஏழைகளின் வரிப்பணம் மூலக் இந்திய அரசு 700கோடி கொட்டி கொடுத்து வருகிறது இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு.எல்லாம் கிட்டத்தட்ட ஓசியில்.நடவடிக்கைகள் எல்லாம் வெளிநாட்டு கைக்கூலி

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement