தேசிய பெண் குழந்தைகள் தினம்: மாணவியருக்கு வாழ்த்து
நாமக்கல், ஜன. 25-
இந்தியாவில், ஜன., 24ல், 'தேசிய பெண் குழந்தைகள் நாள்' 2009 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 'தேசிய பெண் குழந்தைகள் தினத்தை'யொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் படிக்கும் மாணவியர் அனைவருக்கும், பெண் கல்வியின் முக்கியத்துவம், குழந்தை திருமணம் தடுத்தல் ஆகியவை குறித்த வாழ்த்துமடல் வழங்கிடும் அடையாளமாக, இரண்டு மாணவியருக்கு, கலெக்டர் ஸ்ரேயா சிங் வழங்கினார்.
மேலும், அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகத்தின் மூலம், கிராமப்புற மக்களுக்கு, பெண் குழந்தையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, குழந்தை திருமணம் தடுத்தலுக்கான வண்ணப்படம் அச்சிடப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகத்தை, கலெக்டர் வெளியிட்டார்.
மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!