ஆரியூர் முத்துசாமி கோவிலில் நாளை கும்பாபிேஷக விழா: 10 கி.மீ., தூரம், 5,000 பக்தர்களின் தீர்த்தக்குடம் ஊர்வலம்
மோகனுார், ஜன. 25-
ஆரியூர் முத்துசாமி கோவிலில், நாளை கும்பாபிேஷக விழா நடைபெறுவதை முன்னிட்டு, மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு, 10 கி.மீ., துாரம் நடந்து சென்றனர்.
மோகனுார் ஒன்றியம், ஆரியூரில் பிரசித்தி பெற்ற முத்துசாமி கோவில் உள்ளது. மணியன்குலம், கண்ணந்தைகுல குடிபாட்டு மக்களுக்கு பாத்தியப்பட்ட கோவிலில், மகா கணபதி, சப்தகன்னி
மார், கருப்பண்ணசுவாமி ஆகிய தெய்வங்கள் எழுந்தருளி உள்ளனர். ஏழாம் நுாற்றாண்டில், இங்குள்ள ஆலமரத்தின் கீழ், சங்கம் புதரில் உருவான முத்துசாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இக்கோவிலில், திருப்பணி, மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி முடிந்ததை அடுத்து, நாளை, கும்பாபிேஷகம் கோலாகலமாக நடக்கிறது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 6:00 மணிக்கு, கணபதி வழிபாட்டுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, கணபதி, மகாலட்சமி மற்றும் நவக்
கிரக ேஹாமம், தீபாராதனையும் நடந்தது. காலை, 10:00 மணிக்கு, மோகனுார் காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடினர். அங்கிருந்து, 5,000க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள், தீர்த்தக்
குடம் எடுத்துக் கொண்டு, யானை, குதிரை, பசு உள்ளிட்டவை பின்
தொடர, 10 கி.மீ., துாரம் நடந்து சென்று, கோவிலை அடைந்தனர்.
இன்று காலை, 7:00 மணிக்கு, விசேஷ சாந்தி, யாகசாலை பிரவேசம், இரண்டாம் கால நிறைவும், இரவு, 10:00 மணிக்கு, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல்
நிகழ்ச்சியும் நடக்கிறது.
நாளை அதிகாலை, 4:00 மணிக்கு, கடம் புறப்பாடும், காலை, 7:35 மணிக்கு, மகா கணபதி, சப்தகன்னிமார், முத்துசாமி, கருப்பண்ணசுவாமி ஆலய கோபுர கும்பாபி
ேஷகமும், பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிேஷகம் நடக்கிறது. தொடர்ந்து, மகா அபிேஷகம், சுவாமி தரிசனம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவில் பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை, மணியன்குலம், கண்ணந்தைகுல குடிபாட்டு மக்கள், ஆரியூர் கிராம கொங்கு வேளாளர் வழிபாட்டு மக்கள் மன்றம் மற்றும்
விழாக்குழுவினர் செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!