Load Image
Advertisement

எருமப்பட்டி அரசு பள்ளிகளுக்கு ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் உபகரணம்

எருமப்பட்டி, ஜன. 25-
எருமப்பட்டி அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பயன்பாட்டுக்காக எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கல்வி உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு அட்மா குழு தலைவர் பாலசுப்பரமணியன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர்கள் வடிவழகன், செல்வராஜ் ஆகியோர் வரவேற்றனர். டவுன் பஞ்., தலைவர் பழனியாண்டி முன்னிலை வகித்தார். இதில், எம்.எல்.ஏ., பொன்னுசாமி கலந்து கொண்டு, தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 16 லட்சம் செலவில் 2 பள்ளிகளுக்கும் தலா 50 பெஞ்சு
கள் வீதம் 100 டேபிள், பெஞ்சுகள் வழங்கினார். நிகழ்ச்சியில், அவர் பேசுகையில், தனியார் பள்ளிகளை போல் அரசு பள்ளி
கள் தரம் உயர்ந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பிளஸ் 2 தேர்வில் 550 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் பெருமாப்பட்டி முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து (1)

  • அநாமதேயம் - ,

    ஒரு பென்சன் ₹16000/ வருகிறது ஆனால் மார்க்கெட் விலை இதில் பாதிதான் வரும்.தொகுதி நிதியில் இருந்து கொடுத்தால் பாதி கமிஷன் என்பது வழக்கமாகி விட்டது

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement