விசைத்தறிக்கு இலவச மின்சாரம் இல்லை
குமாரபாளையம், ஜன. 25-
''விசைத்தறிக்கு வழங்கப்பட்ட
இலவச மின்சாரம், தி.மு.க., ஆட்சியில் இல்லை'' என, முன்னாள் அமைச்சர்
தங்கமணி பேசினார்.
குமாரபாளையத்தில் அ.தி.மு.க., சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், நகர செயலர் பாலசுப்ரமணி தலைமையில் நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:
இலவச பஸ் என்று கூறிவிட்டு பாதி பஸ் வருவதே இல்லை. பஸ் நடத்துனர்கள் பெண்களை இழிவாக பேசுவதுடன், அமைச்சர் ஒருவரே ஓசி பஸ் என்கிறார். எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியதே கருணாநிதி எனும் தீய சக்தியை அழிக்கத்தான். கிராமப்புற மக்கள் பயனடைந்த அம்மா கிளினிக் திட்டம் இல்லாமல் போனது. கால்பந்தாட்ட வீராங்கனை சிகிச்சை பற்றி கேட்டால், சுகாதாரத்துறை அமைச்சர், 'நயன்தாரா மனம் நோகும் படி யாரும் பேச வேண்டாம்' என்று கூறுகிறார். எதற்கு எடுத்தாலும் போராட்டம் நடத்தும் கம்யூனிஸ்ட்கள் தற்போது எதற்கும் போராட்டம் நடத்துவது இல்லை. விசைத்தறிக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம், தி.மு.க., ஆட்சியில் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!