பலப்பட்டறை மாரியம்மன் கோவில் ஆக்கிரமிப்பு கட்டடம்: நீதிமன்ற உத்தரவால் இடித்து அகற்றம்
நாமக்கல், ஜன. 25-
நாமக்கல்லில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட பலப்பட்டறை மாரியம்மன் கோவிலின் ஒரு பகுதியை, நகராட்சி நிர்வாகத்தினர் இடித்து அகற்றினர்.
நாமக்கல் நகரின் மத்தியில், பழமை வாய்ந்த பலப்பட்டறை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், ஆண்டுதோறும், மே துவங்கி, 3 மாதம் தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. கடந்த, 2005 நவ., 13ல் கோவில் திருப்பணிக்காக, பாலாலயம் செய்யப்பட்டு, 2008 மார்ச், 10ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. கோவில் திருப்பணியின்போது பக்தர்கள் வசதிக்காக, கோவிலின் வடக்கு பகுதியிலிருந்த பொதுப்பாதையை ஆக்கிரமித்து, கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நாமக்கல்லை சேர்ந்த பாப்பாயி, பொதுப்பாதை ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் கட்டடத்தை அகற்ற வேண்டும் என, சென்னை உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். பல ஆண்டாக நடந்து வந்த இந்த வழக்கில், 2022 மார்ச், 25ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், 10 மாதங்களுக்கு பின், நகராட்சி கமிஷனர் சுதா, தாசில்தார் சக்திவேல் தலைமையில், நகராட்சி நிர்வாகத்தினர், வருவாய் துறையினர், கோவில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கும் பணியை, நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மேற்கொண்டனர். பொக்லைன் இயந்திரம் மூலம், வடக்குப்புறம் உள்ள சமையல் கூடம், செல்லாண்டியம்மன் கோவில், உற்சவர் சிலைகள் வைக்கும் அறை உள்ளிட்ட, 80 அடி நீளம், 13 அடி அகலத்துக்குட்பட்ட பாதையில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்கும் பணி
மேற்கொள்ளப்பட்டது.
இப்பணியில், நகரமைப்பு அலுவலர் ரவீந்திரன், ஆய்வாளர் சீனிவாசன், உதவி பொறியாளர் குணசீலன், சர்வேயர் தனசேகரன் உள்பட, 100க்கும் மேற்பட்ட நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். கோவில் ஆக்கிரமிப்புகள் இடிக்கும் நிலையில், பக்தர்கள் மூலம் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, நாமக்கல் டி.எஸ்.பி., சுரேஷ், இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாரியம்மன் கோவிலின் ஒரு பகுதி இடிக்கும் சம்பவம், பக்தர்களிடையே
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!