பள்ளிபாளையத்தில் விதி மீறும் சாய ஆலைகள் நடவடிக்கை எடுக்க நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள்
பள்ளிபாளையம், ஜன. 25-
பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் விதி மீறி செயல்படும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு, மாசு கட்டுபாட்டு வாரியத்துக்கு, நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் செயல்படும் பெரும்பாலான சாய ஆலைகள், சாய கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றுகின்றன. அதேபோல், குடியிருப்பு கழிவு நீரும் ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆற்று தண்ணீர் மாசுடைந்து, அவற்றை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்பட்டன.
இந்நிலையில், சாய ஆலைகள், குடியிருப்பு கழிவுநீர் ஆற்றில் கலப்பதை தடுக்க, நடவடிக்கை எடுக்காத பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகத்துக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம், 55 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இதில், முதல் கட்டமாக கடந்த நவம்பரில், 5 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 10.79 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பபட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த 13ம் தேதி, பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில், சாய ஆலை அதிபர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, பள்ளிபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில், விதி மீறி செயல்படும் சாய ஆலைகள் மீது பராபட்சம் பார்க்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குமாரபாளையத்தில் உள்ள மாசு கட்டுபாட்டு வாரிய அலுவலகத்தில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், நகராட்சி சார்பில் சாய ஆலைககளை கண்காணிக்க, தனி குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் விதி மீறி செயல்படும் சாய ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!