மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தது
கரூர், ஜன. 25-
காவிரி ஆற்றில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால், மாயனுார் கதவணைக்கு வரும், தண்ணீரின் அளவு குறைந்தது.
தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், கரூர் உள்ளிட்ட டெல்டா பாசன பகுதிகளில் விவசாய பணிக்காக கடந்த ஆண்டு மே 24ல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு, 2.50 லட்சம் கன அடி வரை தண்ணீர் மாயனுார் கதவணைக்கு வந்தது.
தற்போது சம்பா, தாளடி ஆகிய விவசாய பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. இதனால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி குடிநீர் தேவைக்காக வினாடிக்கு, 8,000 கன அடி தண்ணீர், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டது.
இடைப்பட்ட பகுதிகளில் தடுப்பணை, கிளை ஆறுகளில் வரும் தண்ணீரும் சேர்ந்து மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 8,123 கன அடி தண்ணீர் வந்தது. ஆற்றிலிருந்து, 7,003 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. மூன்று கிளை வாய்க்கால்களில், 1,120 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூரிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைந்துள்ளதால், மாயனுார் கதவணைக்கும் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.
* அமராவதி அணையில் இருந்து நேற்று காலை, 7:00 மணி நிலவரப்படி புதிய வாய்க்காலில், தண்ணீர் திறப்பு இல்லை. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு வினாடிக்கு, 86 கன அடி தண்ணீர் வந்தது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர் மட்டம், 78.38 அடியாக இருந்தது.
* கார்வாழி ஆத்துப்பாளையம் தடுப்பணைக்கு, மழை குறைந்ததால் தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 20 அடியாக இருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!