சாலை மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி., அமைப்பினர் 148 பேர் கைது
கரூர், ஜன. 25-
கரூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட ஏ.ஐ.டி.யு.சி., அமைப்பினர் 148 பேரை போலீசார் கைது
செய்தனர்.
தமிழக ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் நேற்று, மாநிலம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலை மறியல் போராட்டம் நடந்தது. கரூரில் மாநில ஏ.ஐ.டி.யு.சி., நிர்வாக குழு உறுப்பினர் துரைசாமி தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், சாலை மறியல் போராட்டம் நடந்தது.
அதில், 240 நாட்கள் பணிபுரியும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், எந்த தொழில் செய்தாலும், மாதாந்திர குறைந்தபட்ச ஊதியம் 21 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், தொழிலாளர் நலவாரிய பதிவுகளை, எளிமைப்படுத்த வேண்டும், 6,000 ரூபாய்க்கு குறையாத ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனர்.
பின்னர், சாலை மறியலில் ஈடுபட்ட, இ.கம்யூ., மாவட்ட செயலாளர் நாட்ராயன், மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., தலைவர் குப்புசாமி, செயலாளர் வடிவேலன், துணை செயலாளர் கலாராணி உட்பட 148 பேரை, கரூர் டவுன் போலீசார் கைது

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!