Load Image
Advertisement

கொல்லிமலையில் கார் விபத்து ஒருவர் பலி

சேந்தமங்கலம், ஜன. 25-
கொல்லிமலையில், கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், பவானி பகுதியை சேர்ந்தவர் ரகுநாதன், 39. தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சத்யாதேவி, 36. ரகுநாதனின் சித்தப்பா லோகநாதன், 57, சித்தி லட்சுமி, 48. இவர்கள் நான்கு பேரும் நேற்று அதிகாலை, வாடகை காரில், கொல்லிமலையில் உள்ள எட்டிக்கையம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். காரை, காசிபாளையத்தை சேர்ந்த டிரைவர் முகுந்தன், 23, ஓட்டினார்.
கொல்லிமலை 67வது கொண்டை ஊசி வளைவு, நாச்சியம்மன் கோவில் அருகே கார் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரகுநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மூன்று பேர் லேசான காயமடைந்தனர்.
விபத்து குறித்து வாழவந்திநாடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement