ADVERTISEMENT
இன்றைய நாகரிக உலகில் பலருக்கும் தரையில் நேரடியாக கால்கள் பட வாய்ப்பே இருப்பதில்லை. வெளியே மட்டுமின்றி வீட்டுக்குள்ளும் செருப்பு அணிவது.. சிறிது தூரம் வெளியே செல்ல டூவீலர், கார்.. மிருதுவான ஸ்பிரிங் மெத்தை.. ஸ்டைலிஷான சோபா, நாற்காலிகள்... என நாகரிகமும், வசதியுமே மேலோங்கி உள்ளது. இதனால், பூமியுடனான நேரடி இணைப்பு பலருக்கும் கிடைப்பதில்லை. இதுபோன்ற சூழலில் 'கிரவுண்டிங்' அல்லது 'எர்த்திங் தெரபி' உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் என்பது டாக்டர்களின் கருத்தாகும்.
கிரவுண்டிங் அல்லது எர்த்திங் (earth therapy) என்பது ஒரு சிகிச்சை முறையாகும். இது பூமியுடன் மீண்டும் இணைப்பதன் மூலம் உங்கள் மின் ஆற்றலை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த நடைமுறையானது பூமியில் இருந்து வரும் மின் அலைகள் உங்கள் உடலில் எவ்வாறு நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை புவியியல் அறிவியல் மற்றும் அடிப்படை இயற்பியல் மூலம் வெளிப்படுத்துகிறது.
வெறுங்காலில் மண் தரையில் சிறிது தூரம் நடக்கும் போதோ அல்லது உட்காரும் போதோ வலி, மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் உடல் சோர்வு ஆகியவை குறைவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, புல், மணல் என எந்த தளமாக இருந்தாலும் சரி... உங்களின் சருமத்தை இயற்கையான நிலத்தை தொட அனுமதிப்பதால் அடித்தள ஆற்றலைப் பெறலாம். தரையில் படுப்பதன் மூலம் உங்கள் சருமத்துக்கும் பூமிக்கும் இடையிலான தொடர்பை இன்னும் அதிகரிக்கலாம். எனவே, ஏதாவதொரு பார்க்கில் புற்களின் மீதோ அல்லது கடற்கரை மணலிலோ படுக்கலாம். மேலும், தண்ணீரிலும் நீச்சல் பயிற்சியை மேற்கொள்ளலாம். இதனால், பூமியுடன் நேரடித் தொடர்பு ஏற்படுகிறது.
எனவே, இயற்கையுடன் இணைய குழந்தைகளை இப்போதிருந்தே பழக்குவோம். தினமும் குறைந்தப்பட்சமாக அரைமணி நேரமாவது ஏதாவதொரு கிரவுண்டில் மணலில் கால்கள் படர குழந்தைகளை விளையாட விடுங்கள். ஓடியாடி விளையாடி இயற்கையான முறையில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!