அரசு ஆதிதிராவிடர் பள்ளியில் மாவட்ட கலெக்டர் ஆய்வு
கரூர், ஜன. 25-
கரூர் மாவட்டம், க. பரமத்தி ஊராட்சி ஒன்றியம், புன்னம்சத்திரம் பகுதிகளில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம் ஆகியவற்றில், கலெக்டர் பிரபுசங்கர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
புன்னம்சத்திரம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் வருகைப் பதிவு, மாணவ, மாணவியர் தேர்ச்சி விகிதம், மாணவர்களுக்கு கற்பித்தல் முறை ஆகியவற்றை ஆய்வு செய்து, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார். அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் உயரம், எடை மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகளை ஆய்வு செய்து விபரங்களை கேட்டறிந்தார்.
மேலும், குழந்தையின் விளையாட்டு பயிற்சி திறனை ஊக்குவிக்க அலுவலருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம், எடை மற்றும் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் அலுவலர் சந்தியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!