Load Image
Advertisement

பயன்படுத்த முடியாத நிலையில் போர்வெல் குழாய்கள்: சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு

கரூர், ஜன. 25-
கரூர் மாநகராட்சி வார்டுகளில், வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட, பல போர்வெல் குழாய்கள் பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
தமிழகத்தில் கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவ மழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. இதனால், பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் பாதாளத்துக்கு
சென்றது.
பொதுமக்கள் வசதிக்காக, பொது இடங்களில் அமைக்கப்பட்ட போர்வெல் குழாய்களில் தண்ணீர்
வற்றியது. இதனால், பழுதடைந்த போர்வெல்களை சீரமைக்கவும், புதிதாக போர்வெல்கள் அமைக்கவும், உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை மூலம், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதன் மூலம், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ், புதிதாக போர்வெல்கள் அமைக்கப்பட்டன.
கரூர் மாநகராட்சி, விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள, 48 வார்டுகளில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ், நுாற்றுக்கும் மேற்பட்ட போர்வெல்கள் புதிதாக அமைக்கப்பட்டு, மின் மோட்டார் வசதி, சின்டெக்ஸ் தொட்டி, பைப்புகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், பல சின்டெக்ஸ் தொட்டியில் உள்ள பைப்புகள் உடைந்துவிட்டதால், எந்நேரமும் தண்ணீர் வடிந்தவாறே உள்ளது. மேலும், சின்டெக்ஸ் தொட்டியை சுற்றி கட்டப்பட்ட சுவரிலும் விரிசல் ஏற்பட்டுள்ளன. பல இடங்களில் சின்டெக்ஸ் தொட்டி கான்கீரிட் மேடைகள் இடிந்தும், போர்வெல் குழாய்களில் தண்ணீர் வராமலும் பழுதடைந்துள்ளன.
ஏற்கனவே, கரூர் மாநகராட்சி பகுதியில் சில வார்டுகளில், ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது, போர்வெல் குழாய்களும் பழுதடைந்துள்ளதால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
கடந்த வடகிழக்கு பருவமழையில் ஓரளவுக்கு மழை பெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், போர்வெல் குழாய்களை சீரமைத்தால், கோடைக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறையை சரி செய்ய முடியும். எனவே, உடனடியாக சீரமைப்பு பணிகளை உள்ளாட்சி நிர்வாகத்தினர் தொடங்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement