மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீடு முகாம்
கிருஷ்ணராயபுரம், ஜன. 25-
கிருஷ்ணராயபுரம் வட்டார வள மையம் சார்பில், லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ மதிப்பீடு முகாம் நேற்று நடந்தது.
முகாமை உதவி திட்ட அலுவலர் சண்முகவடிவு தொடங்கி வைத்தார். இதில், கிருஷ்ணராயபுரம் வட்டார வள மையத்துக்கு உட்பட்ட, 18 வயதுக்கு கீழ் உள்ள, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீடு, மாற்றுத்திறன் சான்றிதழ் புதுப்பித்தல், புதிய சான்றிதழ் வழங்குதல், தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, ரயில், பஸ் பாஸ் சலுகை, உதவி உபகரணங்களுக்கான பதிவு, உதவி தொகைக்கான பதிவு, மாநில முதல்வர் மருத்துவ காப்பீடு அறுவை சிகிச்சைக்கான பதிவு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இம்முகாமில், கிருஷ்ணாரயபுரம் வட்டார கல்வி அலுவலர் மீனா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதா, கிருஷ்ணராயபுரம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் முத்துக்குமார், ஆசிரியர் பயிற்றுனர், வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர், இயன்முறை மருத்துவர்கள் கலந்து
கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!