Load Image
Advertisement

இண்டூரை தனி யூனியனாக மாற்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்

நல்லம்பள்ளி, ஜன. 25-
நல்லம்பள்ளி யூனியன் அலுவலகத்தில், நேற்று நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில், இண்டூரை தனி யூனியனாக அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நல்லம்பள்ளி யூனியன் அலுவலகத்தில் நேற்று, யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. சேர்மன் மகேஸ்வரி பெரியசாமி தலைமை வகித்தார். பி.டி.ஓ.,க்கள் ஷகிலா, கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், நல்லம்பள்ளி யூனியனில் உள்ள, பல கிராமங்களுக்கு வழங்கப்படும் ஒகேனக்கல் குடிநீரில், ஆழ்துளை குடிநீர் கலக்கப்படுகிறது. இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கிறது. இதை தடுக்க ஒகேனக்கல் குடிநீருக்கு என, தனியாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க வேண்டும் என, அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என, யூனியன் கவுன்சிலர்கள் பேசினர்.
மேலும், நல்லம்பள்ளி யூனியனில் அதிகளவில் கிராமங்கள் உள்ளதால், நல்லம்பள்ளி யூனியனில் உள்ள சில கிராமங்களை பிரித்து, இண்டூரை தலைமையிடமாக கொண்டு, புதிய யூனியன் அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென, கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, இண்டூரை தலைமையிடமாக கொண்டு புதிய யூனியன் அமைக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement