இந்தியாவில் பணியாற்றும் நான்கில் ஒருவருக்கு ஆட்குறைப்பு குறித்த அச்சம் இருக்கிறது.
நான்கில் 3 பேர், பணவீக்கம் குறித்து கவலையடைகின்றனர். இருப்பினும் அதில் பாதி பேர், 2023ல் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடையுமென நம்புவதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்தாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்., 1ல் தாக்கல் செய்கிறார். ஜன.,31ல் துவங்கும் பட்ஜெட் கூட்டத்தொடர், ஏப்ரல் 6 வரையில் நடைபெறவுள்ளது. அடிப்படை வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்துவது குறித்து அறிவிப்பு இருக்குமென நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில், தனியார் சந்தை பகுப்பாய்வு நிறுவனமான காந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
இந்திய பொருளாதாரம் குறித்து பெரும்பாலானவர்கள் நேர்மறையான கண்ணோட்டத்தை கொண்டுள்ளனர். 2023ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடையும் என்று 50 சதவீதம் பேர் நம்பிக்கையுடன் உள்ளனர். 31 சதவீதம் பேர், மந்தநிலை ஏற்படலாமென எண்ணுகின்றனர். இதில் மெட்ரோ நகரங்களோடு ஒப்பிடுகையில், 54 சதவீதத்திற்கும் அதிகமாக சிறு நகரங்கள் அதிக நம்பிக்கையுடன் உள்ளன.

நான்கில் 3 பேர் அதிகரித்து வரும் பணவீக்கத்தைப் பற்றி கவலைப்படுகிறார்கள். மேலும் அதைச் சமாளிக்க அரசு, தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென விரும்புகிறார்கள். நான்கு இந்தியர்களில் ஒவ்வொருவரும் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடர்பாக கவலைப்படுகிறார்கள்.
தற்போது ரூ.2.5 லட்சமாக உள்ள அடிப்படை வருமான வரி விலக்கு வரம்பை மேலும் அதிகரிக்க வேண்டுமென மிகவும் பொதுவான எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், மூன்றில் 2 சதவீதம் பேர், 80C -ன் கீழ் முதலீடுகளுக்கான வரிச்சலுகையை அதிகரிக்க வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (8)
ஒன்று மக்கள் தொகை, குறைக்க படவேண்டும்..பேக்கரி உணவு பொருள்கள் அதிக பட்ச வியாதிகளுக்கு காரண மாகிறது..ரயில் மற்றும் விமான சேவைகளில், திட்டமிடல் வேண்டும்...சுமார் இரண்டாயிரமாவது ஆண்டுக்கு முன்னர், ரயில்களில் அவ்வளவு கூட்டம் இருந்தது இல்லை..இப்பொழுது வடமாநிலத்தவர், வேலை தேடி வருவோர் போவோர் அதிகமாதலால், ரயிலில் டிக்கெட் கிடைப்பதில்லை..கொல்கத்தா செல்ல வேண்டும் என்றால், மூன்று மாதம் முன் டிக்கெட் எடுக்க வேண்டும்..இது மிக பெரிய அவளை நிலை..இதை தவிர்க்க திட்டமிடல் வேண்டும்..
உலகத்திற்கே வேலை குடுப்போம்னு ஒருத்தரும், நட்சத்திரத்தில் கால் பதிப்போம்னு ஒருத்தரும் நம்புறதா புள்ளி விவரம் சொல்லுது.
ஒரே நபருக்கு பென்ஷன் மற்றும் அவரது அவரது கணவன்/ மனைவியால் கிடைக்க கூடிய குடும்ப பென்ஷன் இரண்டும் வழங்கும் கொடுமையை ஒழிக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு பென்ஷன் மட்டுமே என்ற திட்டம் வரவேண்டும்....
one country one pension தான் ஒரேவழி.ரிடையர் ஆன அனைவரும் ஒன்று என்று கருதி அனைவருக்கும் வாழ்வியல் index ஒன்று கணக்கிட்டு ஒரே அளவான pension வழங்க வேண்டும். pension peRum யாரும் வேறு தொழில் செய்யக்கூடாது.
வருமான வரிச்சலுகை தராவிட்டால் தோல்வி நிச்சயம்.
இந்திய அரசாங்கம் வருமான வரி கட்டும் நடுத்தர மக்களை மேலும் பீதிக்கு உள்ளாக்கி வருகிறது .ஈட்டும் .வருமானத்திற்கு ஏற்றபடி குடும்பம் நடத்த முடியாமல் அவர்களை கடனில் தள்ளி நிலை குலைய வைத்து உள்ளது,நாளுக்கு நாள் விலைவாசி உயர்வதால் என்ன செய்வது என்று தெரியாமல்சாமானிய மக்கள் தவிக்கின்றனர் .பெருகி வரும் கல்விச் செலவுகள் .மருத்துவச்சி செலவுகள் குறைந்து வரும் வேலை வாய்ப்புக்கள் போன்றவற்றால் பீதி அடைந்து இருக்கின்றனர்.எரிபொருள் விலை உயர்வால் விலைவாசி கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டு இருக்கிறது .எரிபொருளின் விலையைக் குறைத்தால் விலைவாசி குறைந்துவிடும் .வருமானம் ஒரே நிலையாக இருக்கிறது இல்லை வருமானமே இல்லாத சூழலில் செலவுகளை எப்படி சமாளிப்பது ???இதை மீறி வீட்டுக்கடன்கள் கல்விக் கடன்கள்,இதர கடன்கள் வாங்கி இருந்தால் அதனை எப்படி அடைப்பது ???இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப ரயில்களும் பேருந்துகளும் இயக்கப்படுவது இல்லை .அப்போது கூட்டம் அவற்றில் இல்லாமல் எப்படி இருக்கும் ???மேலும் திட்டமிட்டு பயணம் செய்வதாகி விட திட்டமிடாமல் திடீர்ப் பயணம் ,அவசரமாக செல்லும் பயணங்கள் .முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் பொது மக்கள் ஆடு மாடுகளைப் போல அடைக்கப்பட்டு பயணம் செய்யும் அவலம் நமது நாடு சுதந்திரம் பெற்று கிட்டத்தட்ட எழுபத்தி ஐந்து ஆண்டு காலம் ஆன பிறகும் நீடிக்கிறது என்பது அவலம் இல்லையா ???வியாதிகள் பெருகுவதால் மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்து வருகிறது.மக்கள் தொகை பெருகிவிட்டது அதற்குத் தகுந்த வேலை வாய்ப்புக்கள் இல்லை ,தற்போது வேலை பார்ப்பவர்களுக்கும் அந்த வேலை இருக்குமா இல்லை போய் விடுமா என்ற பீதி ஆட்டுவிக்ககிறது .வேலை இல்லை என்றால் இந்தியாவில் அரசாங்கம் அவர்களின் மீது எந்த வித அக்கறையும் காட்டாது .அரசாங்க வேலை இருப்பவர்கள் ஓரளவு தப்பிக்கலாம் இருந்தாலும் அவர்கள் வருமானை வரி கட்டும் வளையத்திற்குள் வந்து விடுகின்றனர் ,லஞ்சம் மற்றும் ஊழல் செய்பவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் மிகப் பெரிய அளவில் ஒன்றும் சேமிக்க முடியாது கறுப்புப்பணம் இந்தியாவில் மிகவும் தாராளமாகப் புழங்குவதால் பொருளாதாரம் நன்றாக இருப்பது போல ஒரு மாயை உண்டாகி இருக்கிறது .முதற்படி எல்லாரிடமும் பணம் இல்லை ,ஒரு குறிப்பிட்ட மக்களிடம் இருக்கும் பணம் தான் பல இடங்களில் முதலீடு செய்யப்பட்டு ,செலவழிக்கப்பட்டு வருவதால் பொருளாதாரம் இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது விலைவாசி உயர்வதால் முறை சாரா பணியில் இருப்பவர்கள் தங்கள் கூலியை அதிகமாகக் கேட்கின்றனர்,பெரும்பாலும் வருமானத்தை நோக்கியே எல்லாரும் ஓடிக்கொண்டு இருக்கின்றனர் ,ஆடம்பரம் இல்லாமல் இல்லை ஆனால் அது ஒரு குறிப்ப சாரார்களிடம் மட்டுமே உள்ளது ,வசதியாக இருப்பவர்கள்பணத்தை கண்டபடி செலவழிக்கின்றனர். .