சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
ஓசூர், ஜன. 25-
ஓசூரில், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, ஜே.சி.ஐ., ஓசூர் சிப்காட், செயின்ட் ஜோசப் பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடந்தது.
மூக்கண்டப்பள்ளியில் உள்ள கல்லுாரி வளாகத்தில் துவங்கிய பேரணி, ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் சென்று, மீண்டும் கல்லுாரியில் சென்று முடிவடைந்தது. முடிவில், மாணவியர் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்து கொண்டனர். பேரணியின் போது, சாலை விதிகளை மதிப்போம்.
ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டுவோம். காரில் செல்லும் போது சீட்பெல்ட் அணிவோம் என, மாணவ, மாணவியர் பதாகைகளை கையில் ஏந்தி
சென்றனர்.
ஜே.சி.ஐ., ஓசூர் சிப்காட் தலைவர் வெங்கடேசன், செயலாளர் அப்பாஸ் பாஷா, மண்டல துணைத்தலைவர் விக்னேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!