ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கத்தினர் மறியல்
தர்மபுரி, ஜன. 25-
தர்மபுரியில், ஏ.ஐ.டி.யூ.சி., தொழிற்சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. மாநில செயலாளர் சின்னசாமி தலைமை வகித்தார்.
இதில், மத்திய அரசு நான்கு சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும். தொழிலாளர்களுக்கு, 6,000 ரூபாய்க்கு குறையாத ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி, நிதி பலன்களை உயர்த்தி வழங்க வேண்டும். உள்ளாட்சி, பேரூராட்சியில் பணிபுரியும் துாய்மை காவலர்கள், டேங்க் ஆப்பரேட்டர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள், ஆஷா பணியாளர்களின் குறைகளை களைய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இ.கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வம், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தேவராசன், மாவட்ட துணை செயலாளர்கள் தமிழ்குமரன், மாதேஸ்ரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
* கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், ஓசூர் காந்தி சிலை அருகே, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட செயலாளர் மாதையன் முன்னிலை வகித்தார். விவசாய சங்க மாநில துணைத்தலைவர் லகுமையா பேசினார்.
அதேபோல், தேன்கனிக்கோட்டையில் கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பூதட்டியப்பா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!