குடியரசு தின விழாவை முன்னிட்டு 251 பஞ்.,களிலும் கிராமசபை கூட்டம்
தர்மபுரி, ஜன. 25-
குடியரசு தின விழாவை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 251 பஞ்.,களிலும் வரும், 26ல் கிராமசபை கூட்டம் நடக்க உள்ளது என, தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
குடியரசு தினவிழாவை முன்னிட்டு, தர்மபுரி மாவட்டத்திலுள்ள, 251 பஞ்.,களிலும் வரும், 26ல் காலை, 11:00 மணிக்கு கிராமசபை கூட்டம் நடக்க தேவையான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட பஞ்., தலைவர், செயலாளர் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
கிராமசபை கூட்டத்தில் கிராம பஞ்., நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் குறித்து, விவாதிக்கப்பட உள்ளது. மேலும், பிரதமர் குடியிருப்பு திட்டம், கிராம சாலை திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், வறுமை குறைப்பு திட்டம் உட்பட, பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, மாவட்டத்தில் நடக்கும் கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு, பஞ்.,களில் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!