இன்ஜினியரிடம் ரூ.8.83 லட்சம் அபேஸ்
கிருஷ்ணகிரி, ஜன. 25-
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாக கூறி, சாப்ட்வேர் இன்ஜினியரிடம், 8.83 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்கண்டப்பள்ளி சூர்யா நகரை சேர்ந்தவர் முத்து நாராயணன், 27; பி.டெக்., பட்டதாரி; இவர், பெங்களூருவில் ஐ.டி., நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். கடந்த, 17ல் இவரது மொபைல் போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், பகுதி நேர வேலை இருப்பதாகவும், அதில் அதிக லாபம், கமிஷன் கிடைக்கும் எனவும், குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் கிடைக்கும் எனவும் கூறி, ஒரு இணையதள லிங்கை அனுப்பியுள்ளனர். இதை நம்பிய முத்து நாராயணன், அதில் குறிப்பிட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். பின், அவர்கள் கூறியபடி, மூன்று வங்கி கணக்குகளில், எட்டு லட்சத்து, 83 ஆயிரத்து, 100 ரூபாயை அனுப்பியுள்ளார். அதன்பிறகு அவர் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் புகார்படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!