கோவில் திருவிழாவையொட்டி ஓசூரில் மாநகர மேயர் ஆய்வு
ஓசூர், ஜன. 25-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேரோட்டம் வரும் மார்ச், 7ல் நடக்கிறது. இதில், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம். இதையடுத்து, மாநகராட்சி சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, மாநகர மேயர் சத்யா தேர்ப்பேட்டை பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது, கோவில் தெப்பக்குளத்தை சுத்தம் செய்வது. பக்தர்கள் மலையேறி செல்ல பயன்படுத்தும் தார்ச்சாலையை சீரமைப்பது, தேர் செல்லும் சாலை, பக்தர்களுக்கான இட வசதி குறித்து பார்வையிட்டு, தேவையான வசதிகளை செய்ய, மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியத்திற்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, துணை மேயர் ஆனந்தய்யா, பொதுசுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், கவுன்சிலர்கள் கிருஷ்ணவேணி, பார்வதி, தில்ஷாத் உட்பட பலர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!