நிலத்தகராறில் தாக்கப்பட்ட பெண் சாவு தலைமறைவானவருக்கு போலீஸ் வலை
போச்சம்பள்ளி, ஜன. 25-
மத்துார் அடுத்த, சந்தம்பட்டியை சேர்ந்தவர் மாதம்மாள், 56; இவர் கணவர் இறந்த நிலையில், பூ வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தண்ணீர் பாய்ச்சும்போது, மைத்துனன் சரவணனின் மனைவி செந்தாமரைக்கும், மாதம்மாளுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த செந்தாமரை தன் தம்பி ரமேஷ், 34, என்பவருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த ரமேஷ் மாதம்மாளிடம் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரமடைந்த ரமேஷ், கட்டையால் மாதம்மாளை தாக்கினார். படுகாயமடைந்த மாதம்மாள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். தகவலின்படி, மத்துார் போலீசார் கொலை வழக்கு பதிந்து, தலைமறைவான ரமேஷை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!