தாம்பரம் விமானப்படை நிலையத்தில் ஏர்மேன் தேர்விற்கான முகாம்
கிருஷ்ணகிரி, ஜன. 25-
தாம்பரம் விமானப்படை நிலையத்தில், ஏர்மேன் தேர்விற்கான முகாம் நடக்கிறது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்திய விமான படையின் தாம்பரம் விமானப்படை நிலையத்தில், ஏர்மேன் (Medical Assistant Trade) தேர்விற்கான முகாம் வரும் பிப்., 1 முதல், 8 வரை நடக்கிறது. இதில் அறிவியல் பிரிவில் பிளஸ் 2 படித்தவர்கள் மற்றும் மருந்தியலில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம். பிளஸ் 2 வகுப்பில் குறைந்தபட்சம், 50 சதவீத மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும். திருமணமாகாத இளைஞர்கள், 27.6.1999 முதல், 27.6.2004ம் தேதிக்குள்ளும், திருமணமான இளைஞர்கள், 27.6.1999 முதல் 27.6.2002ம் தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 152.5 செ.மீ., உயரம் இருத்தல் வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, www.airmenselection.cdac.in என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகியோ அறிந்து கொள்ளலாம். கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த, தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், இம்முகாமில் பங்கேற்கலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!