Load Image
Advertisement

ராகி கொள்முதல் நிலையம் திறப்பு

ஓசூர், ஜன. 25-
தேன்கனிக்கோட்டை தாலுகா, பேலகொண்டப்பள்ளி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வளாகத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அமைக்கப்பட்டுள்ள ராகி சிறுதானிய நேரடி கொள்முதல் நிலையத்தை, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்திற்கு ஓராண்டிற்கான தேவையான ராகியை, கிருஷ்ணகிரி மாவட்ட சிறு, குறு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, பாகலுார், நல்லாராப்பள்ளி, சாமனப்பள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தேன்கனிக்கோட்டை தாலுகா, கெலமங்கலம், பேலகொண்டப்பள்ளி, சாலிவாரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய, ஆறு
இடங்களில் ராகி சிறு தானிய நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த ராகியை விற்பனை செய்யலாம். ராகி குவிண்டால் ஒன்றுக்கு, 3,578 ரூபாயை அரசு விற்பனை விலையாக
நிர்ணயித்துள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் சக்திசரள், துணை மண்டல மேலாளர் ராஜலட்சுமி, கொள்முதல் குழு உறுப்பினர்கள் ராமகவுண்டர், தாசப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement