Load Image
Advertisement

பி.டி.ஓ., ஆபீசில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

கிருஷ்ணகிரி, ஜன. 25-
கிருஷ்ணகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலரும், ஆணையருமான (நில சீர்திருத்தம்) பீலா ராஜேஷ், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டியுடன் காவேரிப்பட்டணம் பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அலுவலகத்தின் குறிப்பேடுகள், பணிகள் விபரம் சரியாக பதியப்பட்டுள்ளதா என அலுவலர்களிடம் கேட்டு சரிபார்த்தார். காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகள், சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்குகள் பராமரிப்பு பணிகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.
டி.ஆர்.ஓ., ராஜேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், ஓசூர் சப் கலெக்டர் சரண்யா, பி.டி.ஓ.,க்கள், உள்பட அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement